மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். 
இந்தியா

மகா கும்பமேளா: புனித நீராடிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புனித நீராடினார்.

DIN

மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புனித நீராடினார்.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கியது.

மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் பிரயாக்ராஜ் நகரில் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமம்’ இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

இங்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா நடத்தப்படுகிறது. இந்த நிலையில் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை புனித நீராடினார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "இன்று பிரயாக்ராஜ் சங்கத்தில் குளித்ததை எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இது இந்தியர்களின் ஆன்மிக மற்றும் கலாச்சார மெகா திருவிழா.

இதனை சமூகம் அல்லது மதத்தோடு யாரும் தொடர்புபடுத்தி பார்க்கக்கூடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, கோயில் பூசாரியிடம் நலம் விசாரித்த பாதுகாப்பு அமைச்சர், மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க ராணுவ அதிகாரிகளையும் அவர் சந்திக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT