19 வயது பெண் ஊராட்சி தலைவரான அஃப்ரோஸ்பானு சிபாய் படம்| தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
இந்தியா

குஜராத்தில் 21 வயதுக்குள்பட்ட இளம்பெண் ஊராட்சி தலைவராக தேர்வு: விதிகளை மீறியதா தேர்தல் ஆணையம்?

குஜராத்தில் 19 வயது பெண் ஊராட்சி தலைவராக தேர்வு! தேர்தல் ஆணையம் மீது விமர்சனம் குஜராத்தில் 19 வயது இளம்பெண் ஊராட்சி தலைவராக தேர்வு: விதிகளை மீறியதா தேர்தல் ஆணையம்?

இணையதளச் செய்திப் பிரிவு

குஜராத்தில் 19 வயது பெண் ஊராட்சி தலைவராக தேர்வான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் வயது உள்ளிட்ட விவரங்களை முறையாக ஆய்வு செய்யாததே முக்கிய காரணமென விமர்சனம் எழுந்துள்ளது.

ஊராட்சி தலைவராக ஒருவர் பதவியேற்க குறைந்தபட்சம் அந்த வேட்பாளர் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டுமென்பதே இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள விதி. ஆனால், அதனை மீறி குஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அரசு துறையின் அலட்சியமே காரணம் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

அஃப்ரோஸ்பானு சிபாய் என்ற இளம்பெண் குஜராத்தின் மேஹ்சேனா மாவட்டத்திலுள்ள கிலோசான் கிராமத்தில் நடைபெற்ற ஊராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

இந்தநிலையில், இளம் வயதில் ஊராட்சி தலைவர்களாக தேர்வானவர்களுக்கென தனியாக பாராட்டு விழாவுக்கு குஜராத் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்விழாவில் குஜராத் முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தேர்தலில் வெற்றி பெற்ற இளைஞர்களை கௌரவிக்கவிருக்கிறார்.

இதற்காக அம்மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இளம் ஊராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது, அஃப்ரோஸ்பானு சிபாயின் பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழை அதிகாரிகள் சரிபார்த்துள்ளனர். அதில் அஃப்ரோஸ்பானு சிபாய்க்கு 19 வயதே நிரம்பியுள்ள நிலையில், அவர் தேர்தலில் போட்டியிட்டதும் அதில் வெற்றி பெற்றதும் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளது.

தேர்தல் விண்ணப்ப படிவத்தில் தமது வயதை 21 என்று அஃப்ரோஸ்பானு சிபாய் குறிப்பிட்டிருந்ததால் அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்விவகாரத்தில் அனைத்து விவரமும் சேகரிக்கப்பட்டு ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியருக்கும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், இது குறித்து அஃப்ரோஸ்பானு சிபாய் சொல்வதென்ன? ‘தேர்தல் விண்ணப்ப படிவத்தில் வேட்பாளரின் வயதை மட்டுமே குறிப்பிடும்படி கேட்டிருந்ததால், தனது ஆதார் அட்டையில் உள்ள வயதை கணக்கிட்டு 21 என்று எழுதி பூர்த்தி செய்து கொடுத்ததாகவும். அதனைத்தொடர்ந்து தனது வேட்பு மனு நிராகரிக்கப்படாததால் தேர்தலில் போட்டியிட்டதாகவும். இப்போது தனக்கு ஊராட்சி தலைவர் பதவி கிடைத்துவிட்டதால் அதனை விட்டு விலக மாட்டேன்’ என்று வாதிடுகிறார்.

Underage Sarpanch elected in Gujarat: 19-year-old's victory exposes election blunder

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எடப்பாடி பழனிசாமி திருப்பூா் வருகை: பாஜகவினருக்கு அழைப்பு

வங்கதேசத்தினா் 48 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் திரண்ட அதிமுகவினா்

மூதாட்டியிடம் நகைப் பறித்தவா் கைது

SCROLL FOR NEXT