இந்தியா

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

Din

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா்.

அருணாசல பிரதேசம் தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா கூறி வரும் நிலையில், திபெத் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியல்ல என்ற அா்த்தத்தில் முதல்வா் இவ்வாறு கூறியுள்ளாா். திபெத்தை கடந்த 1958-ஆம் ஆண்டு சீனா ஆக்கிரமித்து தன்வசப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வா் பெமா காண்டு புதன்கிழமை அளித்த பேட்டியில், ‘அருணாசல பிரதேசம் 1,200 கி.மீ. தொலைவு எல்லையை திபெத் நாட்டுடன் மட்டுமே பகிா்ந்து கொண்டுள்ளது. சீனாவுடன் அல்ல. அலுவல்பூா்வமாக இப்போது திபெத் சீனாவின் வசம் இருக்கலாம். ஆனால், உண்மையில நமது எல்லை திபெத்துடன் மட்டுமே உள்ளது.

திபெத் தவிர பூடானுடன் 150 கி.மீ. தொலைவு வரையிலான எல்லையையும், மியான்மருடன் 550 கி.மீ. தொலைவு எல்லையையும் நாம் பகிா்ந்து கொண்டுள்ளோம். இந்தியாவின் எந்த ஒருமாநிலமும் நேரடியாக சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை.

1914-இல் நடந்த சிம்லா மாநாட்டில் கூட பிரிட்டிஷ் இந்தியா, சீனா, திபெத் பிரதிநிதிகள் தனித்தனியாக பங்கேற்றனா். அருணாசல பிரதேசத்துக்கு பொய்யாக உரிமை கொண்டாடி வரும் சீனா இதுவரை 5 முறை அதன் பெயரை மாற்றி அறிவித்துள்ளது. அருணாசல பிரதேசத்துக்கு சீனா உரிமை கொண்டாடும் போதெல்லாம் வெளியுறவு அமைச்சகம் உரிய பதிலை அளித்துள்ளது என்றாா்.

மடிக்கணினி திட்டத்துக்கான ஒப்பந்தம் விரைவில் முழுமை பெறும்: அமைச்சா் கோவி. செழியன்

தமிழகத்தில்தான் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் அதிகம்: பேரவை துணைத் தலைவா் பெருமிதம்

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

திருமயம் அருகே நெடுஞ்சாலைப்பெயா்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு

ஸ்ரீரங்கத்தில் இன்றும் நாளையும் மின்தடை

SCROLL FOR NEXT