மும்பையில் கனமழை.  
இந்தியா

மும்பையில் கனமழை: தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

மும்பையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இந்த மாத தொடக்கத்தில் மழை குறைந்து, கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் மும்பை நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இருப்பினும், அதிகாலைக்குப் பிறகு மழையின் தீவிரம் குறைந்தது.

மும்பையின் மேற்குப் பகுதியில் உள்ள அந்தேரி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேசமயம் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து இயக்கம் மெதுவாக இருந்தாக வாகன ஓட்டிகள் தெரித்தனர்.

மேலும் உள்ளூர் ரயில்களும் சிறிது தாமதமாக இயக்கப்பட்டதாக பயணிகள் சிலர் புகார் கூறினர்.

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது!

திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மும்பை நகரத்தில் சராசரியாக 23.45 மிமீ மழையும், கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 36.42 மிமீ மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 50.02 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு, மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.குறிப்பிட்ட சில இடங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Heavy rains lashed Mumbai overnight, causing waterlogging in some low-lying areas and slowing vehicular movement in parts of the city, civic officials said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் வாழ்த்து! செப். 12ல் பதவியேற்பு?

பற்றி எரியும் நேபாளம் - புகைப்படங்கள்

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் நன்றி!

வெள்ளை நிலா... தீப்தி சதி!

SCROLL FOR NEXT