இடிந்து விழுந்த அரசுப்பள்ளி கட்டடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர்வாசிகள். (படம் | பிடிஐ)
இந்தியா

அரசுப்பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 6 மாணவர்கள் பலி! 17 பேர் காயம்!

அரசுப்பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 6 மாணவர்கள் பலியானதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் மனோகர் தானாவில் உள்ள பிப்லோடி அரசுப் பள்ளியின் 7-ஆம் வகுப்பறையில் காலை 8.30 மணியளவில் பள்ளியின் மேற்கூரை இடிந்து அங்கு அமர்ந்திருந்த குழந்தைகள் மீது விழுந்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர சுமார் 40 குழந்தைகள் காயமடைந்த நிலையில், 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

இன்னும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள், ஆசிரியர்களை மீட்கும் பணியில் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டுள்ள விடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

இடிந்து விழுந்த அரசுப்பள்ளி கட்டடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர்வாசிகள்.

மீட்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் பேரிடர் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தன.

இடிந்து விழுந்தக் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், இது தொடர்பாக முன்னர் பல புகார்கள் எழுந்ததும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உள்ளூர்வாசிகள் புகாரளித்துள்ளனர்.

6 Children Dead, 40 Trapped In Debris As Rajasthan School Building Collapses

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 7 போ் விடுதலை: யாா் வேண்டுமானாலும் மேல்முறையீடு செய்ய முடியாது - மும்பை உயா்நீதிமன்றம்

ஜி.கே.மணி குற்றச்சாட்டுக்கு அன்புமணி தரப்பு பதில்

20 ஆண்டு பணிக்காலத்துக்குப் பின் விருப்ப ஓய்வு: மத்திய அரசு ஊழியா்களுக்கு விகிதாசார அடிப்படையில் ஊதியம்

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் இருவரை நிரந்தர நீதிபதிகளாக்க பரிந்துரை

ராமசாமி படையாட்சியாரின் பங்களிப்பை போற்றுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT