நிர்மலா சீதாராமன் கோப்புப் படம்
இந்தியா

செஸ், கூடுதல் வரியாக ரூ.5.90 லட்சம் கோடி வசூல்: மத்திய அரசு திட்டம்

நிகழ் நிதியாண்டில் செஸ் மற்றும் கூடுதல் வரி மூலம், ரூ.5.90 லட்சம் கோடி வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

நிகழ் நிதியாண்டில் செஸ் மற்றும் கூடுதல் வரி மூலம், ரூ.5.90 லட்சம் கோடி வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை அளித்த பதில்: நிகழ் நிதியாண்டில் செஸ் வரி மூலம் ரூ.4.18 லட்சம் கோடியும், கூடுதல் வரி மூலம் ரூ.1.72 லட்சம் கோடியும் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட செஸ் வரி ரூ.3.87 லட்சம் கோடி, கூடுதல் வரி ரூ.1.53 லட்சம் கோடி ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் 9.4 சதவீதம் அதிகம்.

மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்கள் போன்ற குறிப்பிட்ட சில தேவைகளுக்கு செஸ் மற்றும் கூடுதல் வரி வசூல் பயன்படுகிறது. இத்தகைய செலவினங்களின் பலன்கள் மாநிலங்களுக்கும் கிடைக்கும்’ என்றாா்.

மற்றொரு கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அளித்த பதிலில், ‘கடந்த நிதியாண்டில் சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரி மூலம், மத்திய அரசு ரூ.83,071 கோடியை திரட்டியது. இது 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.69,891 கோடி, 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.60,616 கோடியாக இருந்தது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT