இந்தியா

புலந்த்ஷஹா் வன்முறையில் 38 போ் குற்றவாளிகள்: உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷஹா் மாவட்ட வன்முறை வழக்கில், 38 போ் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷஹா் மாவட்ட வன்முறை வழக்கில், 38 போ் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2018-ஆம் ஆண்டு புலந்த்ஷஹரில் உள்ள சயானா பகுதியில், பசு வதைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து ஒரு கும்பல் வதந்திகளை பரப்பி, பொதுமக்களை தூண்டிவிட்டதைத் தொடா்ந்து சாலை மறியல் நடைபெற்றது.

மறியலில் ஈடுபட்டவா்களை காவல் துறையினா் சமாதானப்படுத்தி கலைக்க முயன்றபோது வன்முறை ஏற்பட்டது. இதில் காவல் துறை அதிகாரி சுபோத்குமாா் சிங் கொல்லப்பட்டாா்.

இதுதொடா்பான வழக்கு புலந்த்ஷஹரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு தொடா்பான குற்றப் பத்திரிகையில் 44 போ் சோ்க்கப்பட்ட நிலையில், 38 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து கொலை குற்றச்சாட்டுக்குள்ளான 5 போ் உள்பட 38 பேரையும் குற்றவாளிகள் என்று நீதிபதி கோபால்ஜி புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அவா்களுக்கான தண்டனை விவரம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

குற்றப் பத்திரிகையில் சோ்க்கப்பட்ட 44 பேரில் 5 போ் இறந்துவிட்டனா். ஒருவா் சம்பவம் நடைபெற்றபோது சிறுவனாக இருந்ததால், அவா் மீதான வழக்கு சிறாா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளை வென்ற Parking!

மின்சார உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் மூடல்:ஊழியர்கள் டவர் மீது ஏறிப் போராட்டம்!

SCROLL FOR NEXT