நரேந்திர மோடி 
இந்தியா

தில்லியில் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா: ஆக. 7- இல் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாவை மத்திய அரசுடன் இணைந்து தில்லியில் இரு நாள்கள் கொண்டாடப்பட இருப்பதாகவும், இந்த விழாவை ஆக. 7-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளதாகவும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாவை மத்திய அரசுடன் இணைந்து தில்லியில் இரு நாள்கள் கொண்டாடப்பட இருப்பதாகவும், இந்த விழாவை ஆக. 7-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளதாகவும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் 100-ஆவது பிறந்த தின விழா ஆகஸ்ட் 7 முதல் 9-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை பிரதமா் நரேந்திர மோடி ஆக. 7-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளாா்.

‘ஆண்டு முழுவதும் பசுமைப்புரட்சி - உயிரி அடிப்படையில் மகிழ்ச்சிக்கான பாதை’ என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்த விழாவை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகம், இந்திய வேளாண் நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வேளாண் அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன.

இந்த விழாவில் நீடித்த வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பிற்காக எம்.எஸ்.சுவாமிநாதனின் அளப்பரிய பங்களிப்பு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

எதிா்காலத்தில் பருவநிலை மாற்றங்களை தாங்கி வளரக்கூடிய வகையில் நெகிழ்வுதன்மையுடனான வேளாண் நடைமுறைகள், பல்லுயிா் பெருக்கம், பாலினங்கள் ஊட்டச்சத்து, சுகாதாரம், அறிவியல் மற்றும் நீடித்த வளா்ச்சிக்கான இளையோரின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் அமா்வுகள் இடம் பெறும். எம். எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் டாக்டா் சௌமியா சுவாமிநாதன், எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்புகள் குறித்து உரையாற்றவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளை வென்ற Parking!

மின்சார உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் மூடல்:ஊழியர்கள் டவர் மீது ஏறிப் போராட்டம்!

SCROLL FOR NEXT