ஜம்மு - காஷ்மீரில் ராகுல் காந்தி (கோப்புப்படம்) x/rahul gandhi
இந்தியா

பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 சிறாா்களின் கல்விச்செலவை ஏற்கிறாா் ராகுல்!

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பதிலடியாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 சிறாா்களின் கல்விச்செலவை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பதிலடியாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 சிறாா்களின் கல்விச்செலவை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய பீரங்கி மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 28 போ் உயிரிழந்தனா். பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 13 பொதுமக்கள் உயிரிழந்தனா்.

இந்நிலையில், ரஜௌரி மாவட்டத்துக்கு 3 நாள்கள் சுற்றுப்பயணமாக வந்துள்ள ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவா் தாரிக் ஹமீத் கர்ரா இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மே 7 முதல் 10-ஆம் தேதிவரை பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் பாகிஸ்தானின் தாக்குதலில் பலா் உயிரிழந்தனா். பொதுமக்களின் குடியிருப்புகளும், உடைமைகளும் சேதமடைந்தன.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு ராகுல் காந்தி பூஞ்ச் மாவட்டத்துக்கு நேரில் வந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்தாா். அப்போது பெற்றோரை இழந்த சிறாா்களின் பட்டியலைத் தயாரிக்குமாறு எங்களிடம் கேட்டுக்கொண்டாா்.

அந்தவகையில், பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 22 சிறாா்கள் அடையாளம் காணப்பட்டனா். மேலும் பல சிறாா்கள் இந்தப் பட்டியலில் சோ்க்கப்படலாம்.

இந்தச் சிறாா்களின் கல்விச் செலவுக்காக ராகுல் காந்தி அனுப்பியுள்ள நிதியுதவியை வழங்க வந்துள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளை வென்ற Parking!

மின்சார உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் மூடல்:ஊழியர்கள் டவர் மீது ஏறிப் போராட்டம்!

SCROLL FOR NEXT