ஹஜ் பயணத்தின் ஒரு பகுதியாக மெக்காவின் தென்கிழக்கில் அமைந்துள்ள அராஃபத் மலையில் குவிந்த புனிதப் பயணிகள். 
இந்தியா

ஹஜ் புனிதப் பயணத்தில் 16 லட்சம் போ் பங்கேற்பு!

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக 16,73,230 போ் பங்கேற்பதாக எக்ஸ் தளத்தில் ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Din

இந்த ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் ஹஜ் புனிதப் பயணத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக 16,73,230 போ் பங்கேற்பதாக எக்ஸ் தளத்தில் சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது ஹஜ் பயணத்தில் பங்கேற்பவா்களில் பெரும்பாலானவா்கள் வெளிநாட்டினா். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சுமாா் 1.6 லட்சம் குறைவு. கரோனா நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியிருந்தது. 2012-ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணிகளின் எண்ணிக்கை 31.6 லட்சத்திற்கும் மேல் என்ற புதிய உச்சத்தை எட்டியிருந்தது.

கரோனா பரவல் காலகட்டத்தில் (2020-2022) சவூதி அரேபியா ஹஜ் பயணிகள் வரவை வெகுவாகக் கட்டுப்படுத்தியது. மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே புனிதப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டின் ஹஜ் பயணிகள் எண்ணிக்கை 30 ஆண்டுகால குறைந்தபட்சமாகும்.

உலகளாவிய பணவீக்கம், பொருளாதார நெருக்கடிகள், அதீத வெப்பநிலை, கடுமையான நுழைவு விதிமுறைகள் ஆகியவை ஹஜ் பயணத்துக்காக இந்த ஆண்டு சவூதி அரேபியா சென்றவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதற்குக் காரணங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பணியின்போது மாரடைப்பால் நடத்துநர் பலி!

இணைய வழியில் பயிர்க் கடன் வழங்கும் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

இந்தியா - அமெரிக்கா வர்த்தம்! பேச்சுவார்த்தை ஒத்திவைப்பா?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள்! முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT