கோப்புப் படம் 
இந்தியா

கர்நாடகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்! பள்ளிகளுக்கு விடுமுறை!

கர்நாடகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதைப் பற்றி...

DIN

கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ள பருவமழையால், அம்மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம், ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அம்மாவட்டத்தின் அங்கன்வாடி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இன்று (ஜூன் 12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்மாவட்டத்தில் அதிகப்படியான கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பேரிடர் மீட்புப் படையினர் தயார்நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், மீனவர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அம்மாவட்டத்தின் ஒவ்வொரு தாலுக்காவிலும் கண்காணிப்பு மையங்கள் மற்றும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: கேரளம்: சரக்குக் கப்பலில் மீண்டும் கரும்புகையால் பரபரப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

நாயன்மார்கள் குரு பூஜை...

மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

SCROLL FOR NEXT