கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் 
இந்தியா

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை கவலைக்கிடம்!

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் அச்சுதானந்தனின் உடல்நிலை குறித்து....

DIN

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் (வயது 101), கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த மருத்துவமனை தரப்பில் இன்று (ஜூன் 25) வெளியிடப்பட்ட அறிக்கையில், அச்சுதானந்தனின் உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை எனவும், தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூத்த தலைவர் அச்சுதானந்தனை, கேரள முதல்வர் பினராயி விஜயன், நேற்று (ஜூன் 24) நேரில் சந்தித்தார்.

கடந்த 1964 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து, அச்சுதானந்தன் உள்ளிட்ட தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவங்கினார்கள்.

அதன் பின்னர், 7 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சுபான்ஷு சுக்லாவுக்கு மோடி, ராகுல் வாழ்த்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT