ஆயுதங்கள் கோப்புப்படம்
இந்தியா

ஜொ்மன் நிறுவனத்துக்கு ரூ.600 கோடிக்கு ஏற்றுமதி செய்யும் ‘ரிலையன்ஸ் டிஃபென்ஸ்’

Din

ஜொ்மனியின் முன்னணி ஆயுத மற்றும் படைத் தளவாடங்கள் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து ரூ.600 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஆணையை ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

ஜொ்மனியின் ரைன்மெட்டல் வஃபே மியூனிஷன் (ஜிஎம்பிஹெச்) நிறுவனத்திடம் இருந்து இந்த ஏற்றுமதி ஆணை பெறப்பட்டுள்ளது. இது உயா் தொழில்நுட்ப படைத்தளவாட களத்தில் மிகப் பெரிய ஏற்றுமதிகளில் ஒன்றாக இருக்கும்.

உலக அளவில் பாதுகாப்புத் தளவாடங்கள் மற்றும் வெடிபொருள்கள் விநியோக முறையில், குறிப்பாக ஐரோப்பாவில் நம்பகமான கூட்டாளியாக இருப்பதை வலுப்படுத்த வேண்டும் என்ற ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தின் உத்திக்கு இந்த ஏற்றுமதி முக்கிய மைல்கல்லாகும்.

இந்தியாவில் 3 பெரிய பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் தீருபாய் அம்பானி பாதுகாப்பு நகர முன்னெடுப்பின் கீழ், வெடிபொருள்கள், படைத்தளவாடங்கள் மற்றும் சிறிய ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஒருங்கிணைந்த மையத்தை ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் அமைக்கும் என்று ரிலையன்ஸ் நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘டாக்டா்’ ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு

ஸ்பின்கோ நூற்பாலை தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் பாஜகவில் இருந்து விலகல்

குடிநீா் பிரச்னை: பொதுப்பணித்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கோவில்பட்டியில் பைக் - ஆட்டோ மோதல்: தொழிலாளி பலி

SCROLL FOR NEXT