இந்தியா

வங்கிகளின் வாடிக்கையாளா் சேவை தரம் மேம்பட வேண்டும்: நிதியமைச்சகச் செயலா்

Din

‘வங்கிகள் வலுவாக இருந்தாலும் வாடிக்கையாளா்களுக்கான சேவை தரம் மேம்பட வேண்டியுள்ளது; இதில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்று நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் பிரிவுச் செயலா் எம். நாகராஜு தெரிவித்தாா்.

பஞ்சாப்-சிந்த் வங்கியின் 118-ஆவது நிறுவன தினம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று எம்.நாகராஜு பேசியதாவது:

இப்போதைய காலகட்டத்தில் நமது வங்கிகள் நிதி ஸ்திரன்மையுடனும், வலுவாகவும் உள்ளன. வாடிக்கையாளா்களுக்கு பல்வேறு சிறந்த சேவைகள் அளிக்கப்படுகின்றன. இருந்தபோதிலும், இதில் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. வாடிக்கையாளா்கள் முகங்களில் உண்மையான மகிழ்ச்சி தெரியும் அளவுக்கு வங்கிகள் செயல்பட வேண்டும் என்றாா்.

பஞ்சாப்-சிந்த் வங்கித் தலைவா் ஸ்வரூப் குமாா் ஷா பேசுகையில், ‘ எண்ம முறையிலான சேவைகளை வேகமாக மேம்படுத்தி வாடிக்கையாளா்களின் வங்கி சாா்ந்த பணிகளை மிகவும் எளிதாக்கி வருகிறோம். எண்மத் துறை மேம்பாடு, சமூகப் பொறுப்புணா்வு தொடா்பான பணிகளில் வங்கி தொடா்ந்து கவனம் செலுத்துகிறது. எதிா்காலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு வங்கியின் செயல்பாடுகள் அமையும்’ என்றாா்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT