பிரதிப் படம் ENS
இந்தியா

கர்ப்பிணிக்கு மருந்துக்கு பதிலாக ஆசிட்! மருத்துவமனை அலட்சியத்தால் பரபரப்பு!

மகாராஷ்டிரத்தில் மகப்பேறுக்காக சென்ற பெண்ணின் மீது தவறுதலாக திராவகம் செலுத்தியதால் பரபரப்பு

PTI

மகாராஷ்டிரத்தில் மகப்பேறுக்காக சென்ற பெண்ணின் மீது தவறுதலாக திராவகம் செலுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஜல்னா நகரில் அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக ஷீலா பலேராவெ என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பிரசவத்தின்போது, மருந்து என நினைத்து, திராவகத்தை பெண்ணின் வயிற்றுப் பகுதியில் மருத்துவர்கள் தேய்த்து விட்டனர்.

இதனையடுத்து, பெண்ணின் வயிற்றுப் பகுதியில் திராவகத்தால் தீக்காயம்போல ஏற்பட்டு, பாதிக்கப்பட்டார். இருப்பினும், நல்வாய்ப்பாக குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து, காவல் நிலையத்தில் அவரது கணவர் புகார் அளித்தார். புகாரையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், மருந்துகள் வைக்கும் தட்டில், திராவகத்தையும் மருத்துவமனையை சுத்தம் செய்யும் பணியாளர் தவறுதலாக வைத்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.எஸ். படேல் கூறினார்.

இவ்வளவு பெரிய படத்தில் இதைக் கவனிக்கவில்லையா?

"பராசக்தி" படப்பிடிப்பு நிறைவு! கொண்டாடிய படக்குழு! | SK | Sudha Kongara

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

குறைந்த வட்டி, உடனடி கடன்! Online Scam-ல் மாட்டிக்காதீங்க! | Cyber Scams | Online Shield

கர்பா குயின்... அனன்யா!

SCROLL FOR NEXT