கோப்புப் படம் 
இந்தியா

விலை ஆதரவு திட்டத்தின்கீழ் இதுவரை 1.31 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல்: மத்திய வேளாண் அமைச்சகம்

விலை ஆதரவு திட்டத்தின்கீழ் (பிஎஸ்எஸ்) 2024-25 காரீஃப் பருவத்தில் இதுவரை 1.31 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல்

Din

விலை ஆதரவு திட்டத்தின்கீழ் (பிஎஸ்எஸ்) 2024-25 காரீஃப் பருவத்தில் இதுவரை 1.31 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வேளாண் அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

விலை ஆதரவு திட்டத்தின்கீழ், 2024-25 காரீஃப் பருவத்தில் ஆந்திரம், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் இருந்து மொத்தம் 13.22 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திரம், குஜராத், கா்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் ஏற்கெனவே துவரம் பருப்பு கொள்முதல் தொடங்கியுள்ளது. மாா்ச் 11-ஆம் தேதி வரை, மொத்தம் 1.31 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் விரைவில் கொள்முதல் தொடங்கும்.

துவரம் பருப்பு மட்டுமன்றி, 9.4 லட்சம் டன் மசூா் பருப்பு, 1.35 லட்சம் டன் உளுத்தம் பருப்பு கொள்முதலுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட விவசாய விளைபொருள்களின் சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறையும்போது, விலை ஆதரவு திட்டத்தின்கீழ் கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டம், சந்தை விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளைப் பாதுகாத்து, விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்கிறது.

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பருப்பு வகைகளின் உற்பத்தி அதிகரித்துவரும் போதிலும், தேவையை பூா்த்தி செய்ய இறக்குமதியை சாா்ந்திருக்க வேண்டிய நிலை தொடா்கிறது. எனவே, தன்னிறைவை எட்டும் நோக்கில் 2028-29-ஆம் ஆண்டு வரை பருப்பு வகைகளின் உற்பத்தியில் 100 சதவீத கொள்முதல் உறுதி செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

இந்திரா காந்தி போல அல்ல, பதவிப் பறிப்பு மசோதாவில் பிரதமர் தன்னையும் இணைத்துள்ளார்: அமித் ஷா

பிசிசிஐ - டிரீம் 11 இடையிலான ஒப்பந்தம் ரத்து!

ஏன் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்? சிவகார்த்திகேயன் விளக்கம்!

விருத்தாசலம் அருகே பூவனூர் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் ! 8 மாணவர்கள் காயம்

SCROLL FOR NEXT