முகப்பு
இந்தியா

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு!

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Updated On : 21 மார்ச் 2025, 3:51 pm IST
பகிர்:

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று வழிபாடு செய்தார்.

பின்னர் அயோத்தி கோயில் விழாவில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்,

Advertisement

Advertisement

"எனக்கு முந்தைய மூன்று தலைமுறையினரும் ராமஜென்மபூமி இயக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் இருந்தபோதும் எனக்கு அயோத்திக்குச் செல்வதில் எந்த பிரச்னையும் இருந்ததில்லை.

ஆனால் ஒரு அரசின் அமைப்பு அதிகாரவர்க்கத்தால் சூழப்பட்டுள்ளது. அந்த அதிகாரவர்க்கத்தில் உள்ள ஒரு பிரிவினர், நான் ஒரு முதல்வராக அயோத்திக்குச் செல்வது சர்ச்சைக்கு வழிவகுக்கும் என்று கூறினர். அப்போது, தேவைப்பட்டால் சர்ச்சை வரட்டும் என்று நான் கூறினேன்.

நான் அயோத்திக்குச் சென்றால், ராமர் கோயில் பற்றிய பேச்சு இருக்கும் என்று மற்றொரு பிரிவினர் கூறினர்.

நான் அதிகாரத்திற்காக அயோத்திக்கு வந்தேனா என்று அவர்களிடம் கேள்வி கேட்டேன். அப்படி, ராமர் கோயிலுக்கு வருவதால் அதிகாரத்தை இழக்க வேண்டியிருந்தாலும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை" என்று கூறியுள்ளார்.

மேலும் முன்பெல்லாம் தலைமை சரியாக இல்லாததால் அயோத்திக்கு அதிகம் வராத மக்கள், இன்று லட்சக்கணக்கில் வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments