பூபேஷ் பாகேல்.. 
இந்தியா

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் குற்றப் புலனாய்வுத் துறை சோதனை!

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை..

DIN

சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேலின் வீடு உள்பட பல இடங்களில் மத்திய புலனாய்வுத் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ராய்ப்பூர் மற்றும் பிலாயில் உள்ள பூபேஷ் பாகேலின் வீட்டையும், அவரின் நெருங்கிய கூட்டாளிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனை எதற்காக நடைபெறுகிறது என்பது குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்கு அமைக்கப்பட்ட வரைவுக் குழு கூட்டத்திற்காக பூபேஷ் பாகேல் இன்று தில்லி செல்ல இருக்கும் நிலையில் சிபிஐயின் இந்த அதிரடி சோதனை அனைவரின் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019 முதல் 2022 வரையிலான ஆட்சிக்காலத்தில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு, அதிகமான மதுபான ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுதொடர்பாக, கடந்த மார்ச் 9 ஆம் தேதி பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிந்துள்ளது.

இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் அரசுக்கு சுமார் ரூ.2,100 கோடிவரை இழப்பு ஏற்பட்டதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தேர்தல் விதிகளை கடுமையாக்க டிரம்ப் உத்தரவு! குடியுரிமை இருந்தால் வாக்களிக்க அனுமதி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உளவுத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி: முதல்வர் நெகிழ்ச்சி!

பிராட்மேனின் 90 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?

விழிகளால் பேசு... ஹூமா குரேஷி

இந்தப் படத்தைப் பார்த்தீர்களா? பிளாக்பஸ்டரான சு ஃப்ரம் சோ!

SCROLL FOR NEXT