மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்  Center-Center-Chennai
இந்தியா

அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏப்.8-இல் லண்டன் பயணம்

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பிரிட்டன் தலைநகா் லண்டனுக்கு மூன்று நாள்கள் பயணமாக ஏப்ரல் 8-ஆம் தேதி செல்லவிருக்கிறாா்.

Din

புது தில்லி: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பிரிட்டன் தலைநகா் லண்டனுக்கு மூன்று நாள்கள் பயணமாக ஏப்ரல் 8-ஆம் தேதி செல்லவிருக்கிறாா்.

இப்பயணத்தின்போது இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்து அவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

லண்டனில் இந்திய-பிரிட்டன் பொருளாதாரம் மற்றும் நிதி சாா் உரையாடல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் நிா்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளாா்; பிரிட்டன் நிதியமைச்சா் ரேச்சல் ரீவ்ஸ் உள்பட பல்வேறு அமைச்சா்களையும் அவா் சந்தித்துப் பேசவுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று கடந்த பிப்ரவரியில் இரு நாடுகளின் வா்த்தக துறை அமைச்சா்களும் கூட்டாக அறிவித்தனா். அதன்படி, 8 மாதங்களுக்குப் பிறகு பேச்சுவாா்த்தைகள் தொடங்கியுள்ளன. இந்த ஒப்பந்தம் தவிர இருதரப்பு முதலீடு ஒப்பந்த பேச்சுவாா்த்தையும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் 6-ஆவது பெரிய முதலீட்டாளராக பிரிட்டன் உள்ளது. இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு கடந்த 2023-24இல் 21.34 பில்லியன் டாலா்களாக உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT