இந்தியா

ரூ.11.50 லட்சத்தில் கியா கேரன்ஸ் கிளாவிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?

கியா நிறுவனத்தின் கேரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி காரைப் பற்றி...

DIN

கியா நிறுவனம் கேரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விவரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

என்ஜின் மற்றும் பவர்டிரெய்ன்

கியா கேரன்ஸ் கிளாவிஸ் மூன்று விதமான என்ஜின் விருப்பங்களைக் கொண்டுள்ளது. 157 குதிரைத்திறன் மற்றும் 253 Nm டார்க்கை வழங்கும் 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 113 குதிரைத் திறன் மற்றும் 143.8 Nm டார்க்கை வழங்கும் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 113 குதிரைத்திறன் மற்றும் 250 Nm டார்க்கை வழங்கும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆகியவை விருப்பத் தேர்வுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

உட்புற அம்சங்கள்

22.62 அங்குல இரட்டைத் திரை அமைப்புடன், இதில் 10.25-அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் 10.25-அங்குல தொடுதிரை உள்ளது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

விலை எவ்வளவு?

கியா கேரன்ஸ் கிளாவிஸ் காரில் HTE, HTE (O), HTK, HTK (+), HTK + (O), HTX, மற்றும் HTX + என 7 வகைகள் உள்ளன. இதன் விலை ரூ.11.50 லட்சத்தில் தொடங்கி ரூ.18 லட்சம் வரை உள்ளது.

இதையும் படிக்க: எப்படி இருக்கிறது புதிய டொயோடா எஸ்யுவி? ரூ.25 லட்சத்தில் அறிமுகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT