வெடிகுண்டு மிரட்டல்  கோப்புப்படம்.
இந்தியா

ஜெய்ப்பூர்: 2 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜெய்ப்பூரில் 2 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தின.

DIN

ஜெய்ப்பூரில் 2 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தின.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள மெட்ரோ நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மிரட்டல் தொடர்பாக தகவல் கிடைத்ததும் போலீஸார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர்.

பனிபார்க்கில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கும், ஜோதி நகரில் உள்ள குடும்ப நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மற்றும் மோப்ப நாய் படைகள் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்

முழுமையான சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இருப்பினும் இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீப காலங்களில் இதேபோன்ற பல சம்பவங்கள் ராஜஸ்தானில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

SCROLL FOR NEXT