மும்பையில் 21 மாடி குடியிருப்பு கட்டடத்தில் கார் பார்க்கிங் லிஃப்ட் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் போரிவலி மேற்கு பகுதியில் உள்ள 21 மாடி குடியிருப்பு கட்டடத்தில் கார் பார்க்கிங் லிஃப்ட் சனிக்கிழமை இடிந்து விழுந்தது.
கார் லிஃப்ட் 7 மீட்டர் ஆழமான குழியில் விழுந்ததில் இரண்டு பேர் சிக்கியதாக பிரஹன் மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பின்னர் சுபம் துரி (30) மற்றும் சன்ஜீத் யாதவ் (45) ஆகியோர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு அருகிலுள்ள சதாப்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் அதில் சுபம் துரி ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. தலையில் காயம் அடைந்த யாதவ், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.