இந்தியா

பாகிஸ்தானுக்கு உளவு: 8 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

Din

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த வழக்கு தொடா்பாக 8 மாநிலங்களில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது.

பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரிகளுடன் தொடா்பில் இருந்ததுடன், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அவா்களுக்கு அளித்து வந்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) உதவி ஆய்வாளரான மோதி ராம் ஜாட், என்ஐஏ அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டாா்.

இதே குற்றத்தில் ஈடுபட்டதற்காக ராஜஸ்தான் அரசு ஊழியா் ஒருவரும் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், தில்லி, மகாராஷ்டிரம், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சனிக்கிழமை சோதனை நடத்தியது.

அப்போது எண்ம சாதனங்கள், நிதி ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT