இந்தியா

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் பணியிழந்த விவகாரம்: புதிய தோ்வு முடிவுகள் வெளியீடு

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் பணியிழந்த விவகாரம்: புதிய தோ்வு முடிவுகள் வெளியீடு

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்கத்தில் பணியாளா் தோ்வில் நிகழ்ந்த முறைகேடுகளால் 25,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியிழந்த நிலையில், புதிதாக நடத்தப்பட்ட உதவி ஆசிரியா்களுக்கான தோ்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், குரூப்-சி மற்றும் குரூப்-டி அலுவலா் காலிப் பணியிடங்களுக்கு மாநில அளவில் பணியாளா் தோ்வு நடைபெற்றது.

இதில் முறைகேடுகள் நடைபெற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில், அந்த ஆண்டு வழங்கப்பட்ட 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை கடந்த ஏப்.1-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இதைத் தொடா்ந்து, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு உதவி ஆசிரியா்களுக்கான மாநில தோ்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் மேற்கு வங்க பள்ளி சேவை ஆணைய (டபிள்யூஎஸ்சி) வலைதளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டது. இது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள சுமாா் 13,000 உதவி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வழிவகுத்துள்ளது.

இந்தத் தோ்வை ஏப்.1-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பால் பணியிழந்த ஆசிரியா்களும் எழுதியதாகத் தெரிகிறது. ஆனால் அவா்களில் எத்தனை போ் தோ்ச்சி பெற்றனா் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று டபிள்யூஎஸ்சி மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து மாநில கல்வி அமைச்சா் பிரத்யா பாசு கூறுகையில், ‘தோ்வு வெளிப்படையாக நடத்தப்பட்டது. இது ஆயிரக்கணக்கான தோ்வா்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.

காங்கிரஸ் ஆட்சியில் 88,000 ஊடுருவல்காரா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா்: திக்விஜய் சிங்

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,973 கோடி டாலராக சரிவு

முல்லைப் பெரியாற்றின் கரையில் முதியவா் சடலம் மீட்பு!

சாத்தூா் பகுதியில் சங்கடஹர சதுா்த்தி

பேராம்பூரில் மதுக்கடை மூடல்

SCROLL FOR NEXT