இந்தியா - நேபாளம் எல்லை (கோப்புப்படம்) ANI
இந்தியா

பிகார் தேர்தல்: இந்தியா - நேபாளம் எல்லை மூடல்!

இந்தியா - நேபாளம் சர்வதேச எல்லை மூடப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் சட்டப்பேரவை இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்தியா - நேபாளம் இடையேயான சர்வதேச எல்லை மூடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு கருதி இரு நாடுகளுக்கு இடையேயான வாகனப் போக்குவரத்து 72 மணிநேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டாம் கட்டமாக 20 மாவட்டங்களில் 122 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள சர்லாஹி, மஹோத்தாரி மற்றும் ரௌதத் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள இந்தியா - நேபாளம் சர்வதேச எல்லை நுழைவுகள் மூடப்பட்டுள்ளன. மஹோத்தாரி மாவட்டத்தில் மட்டும் 11 நுழைவுகள் மூடப்பட்டுள்ளன.

அவசரகால சூழ்நிலைகளைத் தவிர, இரு நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிவரை முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிகார் முதல்கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நவ. 14 ஆம் தேதி எண்ணி, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Bihar elections: India-Nepal border closed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டெஸ்ட்டுக்கு தயாராகும் இந்தியா, தென்னாப்பிரிக்கா!

டிடிஎஃப் வாசனின் ஐபிஎல் டிரைலர்!

போர் நிறுத்தத்திற்குப் பிறகு எப்படி இருக்கிறது காஸா?

தொந்தரவு செய்யவில்லை... அஃப்ரீன் ஆல்வி!

பழுப்பு மேனி, நீலப்பச்சை வானம், அலைகளுக்கே கதைகள் தெரியும்... சிம்ரன் புத்தரூப்!

SCROLL FOR NEXT