மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தர்மேந்திரா!
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் தர்மேந்திராவைப் பற்றி...
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் தர்மேந்திரா(89) வீடு திரும்பியுள்ளதாக மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஹிந்தியில் பாலிவுட் திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சையில் இருந்தார்.
நேற்று(நவ.11) காலை அவர் உடல்நலக் குறைவால் காலமானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக அவரது மனைவியும் எம்பியுமான ஹேமமாலினி, அவரது மகள் நடிகை ஈஷா தியோல் உள்ளிட்டோர் உறுதிப்படுத்தினர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அவர் நலமுடன் இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால், அவர் இன்று காலை 7.30 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவர் பிரதித் சம்தானி தெரிவித்தார்.
Dharmendra discharged from hospital, family decides to take him home: Doctor at Breach Candy hospital
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.