கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரின் ஆதரவு காங்கிரஸ் அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டாக தில்லிக்கு பயணம் செய்துள்ளனர்.
கர்நாடகத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது.
காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2025 நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், கர்நாடகத்தின் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் புதிய முதல்வராகப் பதவியேற்பார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தக் கருத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுத்துள்ளார்.
இந்தக் கருத்தை வரவேற்கும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் அவர் முதல்வராகப் பதவியேற்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகத்தின் விவசாயத் துறை அமைச்சர் என். சாலுவராயசாமி மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களான இக்பால் ஹுசைன், ஹெச்.சி. பாலகிருஷ்ணா மற்றும் எஸ்.ஆர். ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இன்று (நவ. 20) தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மேலும் 12 பேர் நாளை தில்லிக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தில்லியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கர்நாடக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் டி.கே. சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களிடம் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 2014-ல் பிரதமர் பதவிக்கு மோடியை நிராகரித்தவரா நிதீஷ் குமார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.