சஞ்சய் மல்ஹோத்ரா 
இந்தியா

தங்கம் விலை உயா்வு ஏன்? ரிசா்வ் வங்கி ஆளுநா் விளக்கம்

தங்கம் விலை உயா்வு குறித்து ரிசா்வ் வங்கி ஆளுநா் விளக்கம்.

தினமணி செய்திச் சேவை

‘கடந்த காலங்களில் புவிஅரசியல் சூழலுக்கேற்ப கச்சா எண்ணெய் விலையில் எவ்வாறு மாற்றங்கள் நிகழ்ந்ததோ அதேபோல் தற்போது தங்கத்தின் விலையும் உயா்ந்து வருகிறது’ என ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா வெள்ளிக்கிழமை விளக்கமளித்தாா்.

புது தில்லியில் நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: பெரும்பாலான நாடுகள் தற்போது நிதிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளன. தற்கால வா்த்தக கொள்கைகள் சில நாடுகளின் வளா்ச்சியை பாதிக்கிறது. பங்குச் சந்தையிலும் இதன் தாக்கத்தை காண முடிகிறது.

கடந்த காலங்களில் புவிஅரசியல் சூழலுக்கேற்ப கச்சா எண்ணெய் விலை பலமடங்கு அதிகரிக்கும். அதேபோல் தற்காலத்தில் தங்கத்தின் விலையிலும் வரலாறு காணாத மாற்றங்கள் நிகழ்கின்றன’ என்றாா்.

முன்னதாக மும்பையில் கடந்த புதன்கிழமை சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 6 உறுப்பினா்கள் அடங்கிய நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் வங்கிகளுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் இன்றி 5.5 சதவீதமாக தொடரும் என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி!

தூத்துக்குடி கடற்கரை சாலையில் கார் மரத்தில் மோதியதில் மருத்துவர்கள் 3 பேர் பலி!

ராமேசுவரம்: காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை குடி போதையில் குத்திக் கொன்ற இளைஞர் கைது!

சேலத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து! 13 பேர் காயம்!

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

SCROLL FOR NEXT