நீதிபதிகள் பதவிஉயர்வு விவகாரத்தில் பணிமூப்பை முடிவுசெய்யும் காரணிகள் தொடர்பாக அக்.28-ஆம் தேதிமுதல் விசாரணையை தொடங்கவுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் என நீதித்துறையின் மேல்நிலை முதல் கீழ்நிலை வரை பணிமூப்பு, பதவிஉயர்வு, ஊதியம், சலுகைகள் உள்ளிட்டவற்றில் நிலவும் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வுகாண அகில இந்திய நீதிபதிகள் சங்கம் உள்பட பல்வேறு தரப்பினரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், கே.வினோத் சந்திரன் மற்றும் ஜயமால்ய பாக்சி ஆகிய 5 பேரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "பதவி உயர்வு விவகாரத்தில் பணிமூப்பை முடிவு செய்யும் காரணிகள் தொடர்பாக அக்.28 முதல் விசாரணை தொடங்கவுள்ளது.
சிவில் நீதிபதிகள், நீதித்துறை நீதிபதிகளாக பணியில் சேர்ந்தவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு முதன்மை மாவட்ட நீதிபதிகளாகப் பதவி உயர்வு வழங்க ஆதரவளிப்பவர்கள் அக்.28-ஆம் தேதி வாதிடலாம். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அக்.29-ஆம் தேதி வாதிடலாம்' எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.