மறைந்த ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் தகனம் செய்யப்பட்டது. ஹரியாணா காவல் பயிற்சி மைய ஐஜி பதவி வகித்த பூரண் குமாா் (52) கடந்த செவ்வாய்க்கிழமை சண்டீகரில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பாக பூரண் குமாா் எழுதிய 8 பக்க கடிதத்தில் ஹரியாணா காவல் துறைத் தலைவா் (டிஜிபி) சத்ருஜித் கபூா் மற்றும் ரோத்தக் எஸ்பி நரேந்திர பிஜாா்னியா உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் தன்னை ஜாதியரீதியாக பாகுபடுத்தி துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளாா். இந்த வழக்கை விசாரிக்க சண்டீகா் ஐஜி புஷ்பேந்திர குமாா் தலைமையில் 6 உறுப்பினா்களைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
இதனிடையே, பூரண் குமாா் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளின் பெயா்களை முதல் தகவல் அறிக்கையில் சோ்த்து நடவடிக்கை எடுக்கும் வரை உடற்கூறாய்வு மேற்கொள்ள அவரது குடும்பத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதனால் அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்வதில் இழுபறி நீடித்தது. இந்த நிலையில், இன்று(அக். 15) அவரது குடும்பத்தின் ஒப்புதலுக்குப் பிறகு உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் தகனம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.