அமெரிக்காவின் உறவில் முன்னுரிமை இந்தியாவுக்கே; பாகிஸ்தானுக்கு அல்ல என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
மலேசியாவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் திஙக்ள்கிழமை(அக். 27) நடைபெறும் சந்திப்புக்கு முன் இன்று(அக். 26) செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு குறித்து வினவப்பட்டது. அதற்கு பதிலளித்து ரூபியோ பேசியதாவது:
“பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் எந்தவொரு விஷயமும், இந்தியாவுடனான எங்களின் நட்பு அல்லது உறவை மோசமாக்குதல் அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனில் நடைபெறாது. இந்தியாவுடன் அமெரிக்காவின் உறவும் நட்பும் ஆழமானது; வரலாற்றுச் சிறப்பானது; முக்கியமானதும்கூட.
ஆனால், நாங்கள் (அமெரிக்கா) பல்வேறு நாடுகளுடன் உறவை விரும்புகிறோம் என்பதை அவர்கள் (இந்தியா) புரிந்து செயல்பட வேண்டும். பாகிஸ்தானுடன் எங்களின் உறவை விரிவுபடுத்த ஒரு வாய்ப்பிருப்பதையும் நாங்கள் இப்போது பார்க்கிறோம்.
நாங்கள் உறவு வைத்துக் கொள்ளாத சில நாடுகளுடனும் அவர்களுக்கு (இந்தியா) நல்லுறவு உள்ளது. ஆக, இதெல்லாம், வெளியுறவுக் கொள்கையின் ஒருபகுதியே” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.