அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் 
இந்தியா

ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனும் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு!

அபிஷேக் பச்சனும் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து அவரது கணவர் அபிஷேக் பச்சனும் தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் அபிஷேக் பச்சன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனது அனுமதியின்றி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், ஏஐ புகைப்படங்கள் பல்வேறு வலைதளங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது புகைப்படங்களை தவறாக சித்தரித்து, வணிக ரீதியில் சில நிறுவனங்கள் பயன்படுத்துவதாகவும், இதற்கு தடை விதிக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேஜாஸ் கரியா, ”கூகுள் நிறுவனத்திடம் சம்பந்தப்பட்ட லிங்குகளை அகற்றச் சொல்லலாம். அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்திய வலைதளங்கள், நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பகிர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், அபிஷேக் பச்சனின் புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, அனுமதியின்றி புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி ஐஸ்வர்யா ராய் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த வழக்கையும் நீதிபதி தேஜாஸ் கரியாதான் விசாரித்தார். அந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையும் ஜனவரி 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Following actress Aishwarya Rai, her husband Abhishek Bachchan has also filed a case in the Delhi High Court seeking a ban on the use of her photos without permission.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசடி வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நடிகை கௌதமி!

இந்தியா அபார பந்துவீச்சு; 57 ரன்களுக்கு சுருண்ட ஐக்கிய அரபு அமீரகம்!

செப். 12 -ல் பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்!

தில்லியில் 1 மில்லியன் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த திட்டம்!

விஜய் பிரசாரம்: வாகனத்தில் நிற்கக்கூடாது; கையசைக்கக் கூடாது! 23 நிபந்தனைகள்!! செய்திகள்: சில வரிகளில் | 10.9.25 | TVKVIJAY

SCROLL FOR NEXT