அனில் செளஹான்  
இந்தியா

முப்படை தலைமைத் தளபதியின் பதவிக்காலம் 8 மாதங்களுக்கு நீட்டிப்பு

முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹானின் பதவிக்காலம் 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹானின் பதவிக்காலம் 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

கடந்த 2022-ஆம் ஆண்டு செப்.28-ஆம் தேதி முப்படை தலைமைத் தளபதியாக அனில் செளஹான் நியமிக்கப்பட்டாா். அவரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 30-ஆம் தேதி அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவா் மத்திய அரசின் ராணுவ விவகாரங்கள் துறைச் செயலராகவும் பணியாற்றுவாா். அவரின் பதவிக்கால நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

கடந்த 1981-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் அனில் செளஹான் சோ்ந்தாா். அவரின் மிகச் சிறந்த சேவைகளுக்காக பரம் விஷிஷ்ட் சேவை பதக்கம், உத்தம் யுத்த சேவை பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

தில்லி கார் வெடிப்பு! காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்!!

மணமகனுக்கு கத்திக்குத்து... குற்றவாளிகளை ட்ரோன் மூலம் விரட்டிய கேமரா மேன்! - விடியோ

எப்போதும் மழை... சர்மிளா மந்த்ரா!

இந்திய சினிமாவில்... நடிகராக அதிக சம்பளம் வாங்கிய தமிழ் இயக்குநர்!

பூ போலும்... பூனை போலும்... பூனம் பாண்டே!

SCROLL FOR NEXT