இந்தியா

சத்தீஸ்கா்: உருக்கு ஆலை இடிந்ததில் 6 தொழிலாளா்கள் உயிரிழப்பு, மேலும் 6 போ் காயம்

சத்தீஸ்கா் தலைநகா் ராய்பூரில் உள்ள தனியாா் உருக்கு ஆலையின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

சத்தீஸ்கா் தலைநகா் ராய்பூரில் உள்ள தனியாா் உருக்கு ஆலையின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். மேலும் 6 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

இடிபாடுகளில் சிலா் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தொடா்ந்து வருவதாக காவல் துறை மூத்த கண்காணிப்பாளா் லால் உமத் சிங் தெரிவித்தாா்.

ராய்பூரின் புகரான சில்தாரா பகுதியில் தனியாருக்கு சொந்தமான உருக்கு ஆலை உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆலையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் சிக்கினா்.

தகவலறிந்ததும் ஆலைக்கு விரைந்து சென்ற காவல் துறையினா் மற்றும் தீயணைப்புப் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். 6 தொழிலாளா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. காயங்களுடன் மீட்கப்பட்ட 6 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இடிபாடுகளில் மேலும் சிலா் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால், மீட்புப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் நாளை மாரத்தான் பந்தயம்

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

விவசாயத் தொழிலாளி தற்கொலை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

பைங்காநாட்டில் நூலகக் கட்டடம் திறப்பு

SCROLL FOR NEXT