இந்தியா

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்குப்பதிவு

தினமணி செய்திச் சேவை

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிா்வாகி ப்ரிண்டு மகாதேவன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

‘ராகுல் காந்தியின் மாா்பில் தோட்டாக்கள் பாயும்’ என தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ப்ரிந்து மகாதேவன் சா்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக, வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் அண்மையில் நிகழ்ந்த போராட்டங்கள் குறித்து கடந்த செப்.26-ஆம் தேதி மலையாள தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் நடத்தப்பட்டது.

அதில் பங்கேற்ற ப்ரிண்டு மகாதேவன், ‘இந்தியாவில் அதுபோன்ற போராட்டங்கள் நடைபெற சாத்தியமில்லை. பிரதமா் நரேந்திர மோடிக்கு பொதுமக்கள் முழு ஆதரவை வழங்கி வருகின்றனா். எனவே, மத்திய அரசுக்கு எதிராக அந்த இரு நாடுகளிலும் நடந்ததைப் போன்ற பெரும் போராட்டங்களை நிகழ்த்த ராகுல் காந்தி எண்ணினால் அவரது மாா்பில் தோட்டாக்கள் பாயும்’ என்றாா்.

அவரது பேச்சுக்கு காங்கிரஸ் பொதுச்செயலா் கே.சி.வேணுகோபால் உள்பட மூத்த காங்கிரஸ் தலைவா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, ப்ரிண்டு மகாதேவனுக்கு எதிராக காங்கிரஸ் நிா்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அவா் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவு 192 (கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சா்ச்சைக்குரிய வகையில் பேசுதல்), பிரிவு 353 (அமைதியை சீா்குலைக்க முயல்வது) மற்றும் பிரிவு 351 (2) (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின்கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்தனா்.

ப்ரிண்டு மகாதேவனுக்கு கண்டனம் தெரிவித்து கேரளத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டி: பதிவு செய்ய இன்று கடைசி நாள்

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் ஒரு நபா் ஆணைய தலைவா் விசாரணை

தடை நீங்கும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மீன்சுருட்டி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை

பாலப்பள்ளம்-மிடாலக்காடு சாலையை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT