முகப்பு
இந்தியா

உ.பி. படகு விபத்து: பலி 13ஆனது, தொடரும் தேடும் பணி!

உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 1:09 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:54 PM

உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சாமுண்டா காட் அருகே மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், மதுரா மாவட்டம், பிருந்தாவனத்தில் உள்ள யமுனை நதிக்கரையில் விரிவான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதல் மாவட்ட ஆட்சியர் அமரேஷ் குமார் கூறுகையில், தேசிய பேரிடர் மீட்புப் படை-மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தேடுதல் பணியைத் தொடர்ந்து வருகின்றன. இன்று, சாமுண்டா காட் அருகே மேலும் இரு சடலங்கள்(மொத்த பலி எண்ணிக்கை 13) மீட்கப்பட்டன. அந்த சடலங்கள் பிணவறைக்கு அனுப்பப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

Advertisement

"இன்று, நாங்கள் தேடுதல் பணியை 7 பிரிவுகளாகப் பிரித்துள்ளோம், மேலும் ஆற்றின் கீழ் பகுதிகளில் சடலங்களைக் கண்டறிய அதிக வாய்ப்புகள் இருப்பதால், ஆற்றின் கீழ் பகுதிகளில் தேடுவதே எங்கள் முயற்சியாகும். எனவே, எங்கள் கவனம் கீழ் பகுதிகளில் இருக்கும், மேலும் எங்கள் குழுக்கள் அனைத்தும் இதில் பணியாற்றி வருகின்றன," என்று அவர் மேலும் கூறினார்.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் யமுனை ஆற்றில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை படகுப் பயணம் மேற்கொண்டனா். அப்போது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் உயிரிழந்தனா். 22 போ் காயமடைந்தனா். 5 போ் மாயமாகினா்.

மீட்புப் பணிகள் தொடா்ந்த நிலையில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து சுமாா் 1 கிலோமீட்டா் தொலைவில் மாணிக் டாண்டன் (42) என்ற நபரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

The death toll increased to 12 in the Mathura boat capsize tragedy that occurred on Friday after one more body was recovered near Chamunda Ghat on Sunday, while extensive search and rescue operations continued along the Yamuna River in Vrindavan, Mathura district, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.