மதுராவில் கவிழ்ந்த படகு மீட்பு: மாயமான சுற்றுலாப் பயணிகளின் நிலை?
பிருந்தாவனம் யமுனை ஆற்றில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது பற்றி..
உத்தரப் பிரதேச மாநில பிருந்தாவனம் யமுனை ஆற்றில் கவிழ்ந்த படகு மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யமுனை ஆற்றில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, கேசி படித்துறை அருகே சென்றபோது அங்கு அமைக்கப்பட்டிருந்த மிதவைப் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆற்றில் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து, மிதவைப் பாலம் பெருமளவில் அண்மையில் அகற்றப்பட்டது. சிறிய பகுதி மட்டும் எஞ்சியிருந்த நிலையில், அதன் மீது படகு மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 10 போ் உயிரிழந்தனர். 22 போ் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக ஆக்ரா மண்டல டிஐஜி சைலேஷ் குமார் பாணடே கூறுகையில்,
Advertisement
Advertisement
யமுனை ஆற்றில் கவிழ்ந்த படகைக் கடந்த நான்கு மணி நேரப் போரட்டத்துக்கு பின்னர் ஆழமான சதுப்பு நிலப் பகுதியில் தீவிர முயற்சிக்குப் பின் மீட்கப்பட்டது. இருப்பினும், காணாமல் போன ஐந்து பேரின் என்ன ஆனது என இதுவரை கண்டறியப்படவில்லை.
காணாமல் போனவர்களில் சிலர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கச் சாத்தியக்கூறு இருப்பதாகவும், அவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறும்.
படகு விபத்தில் காயமடைந்தவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கான பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் உடல்கள், அவர்களை சார்ந்த இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பாதுகாப்பு நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படும். இந்த விபத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
The boat that capsized here in the Yamuna river on Friday, leaving 10 tourists dead, 22 injured and five missing, has been retrieved, and no bodies have been found trapped underneath it, said a senior police officer involved in the search and rescue operation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.