FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு: தமிழக மீனவர்கள் 8 பேர் உயிர் தப்பினர்!

தமிழக மீனவர்கள் 8 பேருடன் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கிய நிலையில் அவர்கள் அனைவரும் உயிர்தப்பினர்.

Updated On : 11 ஜூலை 2026, 4:28 pm IST
கடலில் மூழ்கிய விசைப்படகு
பகிர்:

தமிழக மீனவர்கள் 8 பேருடன் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கிய நிலையில் அவர்கள் அனைவரும் உயிர்தப்பினர்.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஆந்திராவின் கிருஷ்ணாபட்டினம் அருகே விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது படகு பழுதான காரணத்தால் உள்ளே நீர் புகுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அருகிலிருந்த மீன்பிடிப் படகுகள் உதவியுடன் படகை கரைக்கு இழுத்துவர மீனவர்கள் முயன்றுள்ளனர்.

Advertisement

Advertisement

ஆனால், கடல் நீர் வேகமாக உள்ளே புகுந்ததால் படகு முழுவதுமாகக் கடலில் மூழ்கியுள்ளது. படகில் இருந்த மீனவர்கள் 8 பேர் கடலில் குதித்து தத்தளித்த நிலையில் அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டுள்ளனர்.

கடலில் மூழ்கிய படகு சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரசாத் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரிய வந்துள்ளது. படகு மூழ்கியது தொடர்பாக மீன்வளத் துறை மற்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

summary

8 Tamil Nadu fishermen escape after boat sinks in the middle of the sea

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments