முகப்பு
இந்தியா

விசாகப்பட்டினம்: படகு கவிழ்ந்ததில் 6 மீனவர்கள் மாயம்

விசாகப்பட்டினம் கடற்கரை அருகே படகு கவிழ்ந்ததில் மாயமான6 மீனவர்களைத் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Updated On : 5 ஜூலை 2026, 2:44 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

விசாகப்பட்டினம் கடற்கரை அருகே படகு கவிழ்ந்ததில் மாயமான6 மீனவர்களைத் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கடற்கரை அருகே மோசமான வானிலை காரணமாக, ஏழு மீனவர்கள் சென்ற மீன்பிடிப் படகு கவிழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதில், ஆறு மீனவர்கள் மாயமாகியுள்ளனர். இருப்பினும், அவர்களில் ஒருவர் அவ்வழியே சென்ற சொகுசுப் கப்பல் ஒன்றால் மீட்கப்பட்டதாக மீன்பிடிச் சங்கத் தலைவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மீன்பிடிப் பணிகளை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது படகுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறிய அவர், மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாகப் படகு கவிழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். மாயமான மீனவர்களைக் கண்டறியும் பணியில் இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் கடலோரக் காவல் பிரிவு ஈடுபட்டுள்ளன.

Advertisement

Advertisement

மீன்பிடிப் படகுகள் சங்கத் தலைவர் லட்சுமண ராவ் கூறுகையில், அந்த ஏழு மீனவர்களும் ஜூலை 1-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். ஜூலை 4-ஆம் தேதி மதியம் 2 மணிக்குள் திரும்பிவிடுவதாகத் தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தனர். இருப்பினும், அவர்களின் அலைபேசிகள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட குடும்பத்தினர், கடலோரக் காவல் படை மற்றும் கடலோரக் காவல் பிரிவினருக்குத் தகவல் தெரிவித்தனர் என்றார்.

இதற்கிடையில், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் காணாமல் போன விவகாரம் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளையும் ஆய்வு செய்தார். மாயமான மீனவர்களைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கினர்.

கூடுதல் கடலோரக் காவல் படை கப்பல்களை ஈடுபடுத்தித் தேடுதல் பணியை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதல்வரிடம், கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்புப் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

summary

Six fishermen went missing after a fishing boat carrying seven of them is suspected to have capsized off the Visakhapatnam coast amid rough weather, with one fisherman rescued by a passing cruise ship, a fishing association leader said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments