இந்தோனேசியா படகு விபத்து: 12-ம் நாளில் 52வது சடலம் மீட்பு! 83 பேரைக் காணவில்லை!
இந்தோனேசியா படகு விபத்தில் பலியானவர்களில் 52 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது குறித்து...
இந்தோனேசியாவில், கடல் சீற்றத்தால் படகு மூழ்கி பலியானவர்களில் 52 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள சுரபயாவில் இருந்து போர்னியோ தீவில் உள்ள பஞ்சர்மினுக்கு 243 பயணிகளுடன் கடந்த செப்.13 ஆம் தேதி சென்ற படகு கடுமையான கடல் சீற்றத்தில் சிக்கியது.
சுமார் 10 அடி உயரத்துக்கு எழுந்த கடல் அலைகளில் சிக்கி அந்தப் படகு ஜாவா கடலின் மசெலம்போ தீவுப் பகுதியில் கவிழ்ந்து மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கப்பலில் இருந்து விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தோனேசிய மீட்புப் படையினரால் 108 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும், நூற்றுக்கணக்கான பயணிகள் காணாமல் போனதால் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், 12 ஆம் நாளான இன்றும் (செப். 25) தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் மூலம் இதுவரை விபத்தில் பலியான 52 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்துடன், காணாமல் போன 83 பயணிகளைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சுமார் 98 அடி ஆழத்தில் கடலில் மூழ்கியுள்ள அந்தப் படகை வெளியே கொண்டுவர திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் போர்னியோ நகரத்திலுள்ள காவல் துறை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு அவர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக, சுமார் 17,000-க்கும் அதிகமான தீவுகளால் உருவான இந்தோனேசியா நாட்டில் படகுப் போக்குவரத்து ஒரு பொதுவான பயண முறையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
It has been reported that the bodies of 52 people have been recovered following the capsizing of a boat due to rough seas in Indonesia.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.