செனகல்: புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்து 21 பேர் பலி
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாது குறித்து...
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 21-க்கும் மேற்பட்டவா்கள் பலியானதாக அஞ்சப்படுகிறது.
சனிக்கிழமை இரவு நிலவரப்படி, பலியானவர்களின் எண்ணிக்கை "தற்காலிகமானது" என்றும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் செனகல் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக மேற்கொள்ளப்படும் அபாயகரமான பயணத்தின்போது, வடமேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலின் வடக்குக் கடலோரப் பகுதிக்கு அப்பால் புலம்பெயர்ந்தோர் சென்ற சிறிய படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
21 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக செனகல் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டக்கருக்கும் வடக்கே உள்ள செயிண்ட்-லூயிஸ் நகருக்கும் இடையில், கெபெமர் மாகாணத்தில் உள்ள லூம்பூல் மணல் குன்றுகளுக்கு அருகே, சனிக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்ததாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், செனகலின் முக்கிய புலம்பெயர்ந்தோர் உதவி சங்கமான போசா ஃபீயின் இந்த விபத்து வெள்ளிக்கிழமை நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் இந்த வழியாக படகு மூலம் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளை அடைய முயன்ற ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சோ்ந்தவா்கள், ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவை அடைவதன் மூலம் ஐரோப்பாவுக்குள் அடைக்கலம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இந்த ஆபத்தான கடல் வழிப் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.
மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினை நோக்கிச் செல்லும் கடல் வழித்தடம் மிகவும் அபாயம் நிறைந்ததாகக் கூறப்படும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆபத்தான அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக ஐரோப்பாவை வந்தடைய முயற்சிக்கின்றனர்.
இதற்கிடையே, ஸ்பெயினை நோக்கிச் சென்ற மற்றொரு சிறிய படகில் இருந்த 142 புலம்பெயர்ந்தோரை வெள்ளிக்கிழமை செனகல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
காவல்துறை தகவல்படி, அந்த குழுவில் 23 பெண்கள், இரண்டு பச்சிளம் குழந்தைகள் மற்றும் இரண்டு சிறுவர்கள் இருந்தனர். இவர்கள் செனகல், காம்பியா, கினியா-பிசாவ், கினியா மற்றும் நைஜீரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஸ்பெயினை அடைய இலக்கு வைத்து இதேபோன்ற ஒரு சிறிய படகில் வந்த 142 புலம்பெயர்ந்தோரை வெள்ளிக்கிழமை இடைமறித்ததாக செனகல் அதிகாரிகளும் தெரிவித்தனர்.
மனிதக் கடத்தல் கும்பல்களை ஒழிப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், குறிப்பாக அண்டை நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் இதைச் செயல்படுத்தப்போவதாகவும் செனகல் அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஸ்பெயினின் கேனரி தீவுகளில் ஒன்றான 'எல் ஹியரோ' பகுதிக்கு புலம்பெயர்ந்தோர் படகுகளில் வருகை திடீரென அதிகரித்ததைத் தொடர்ந்து, அங்குள்ள அதிகாரிகள் சனிக்கிழமை அவசரநிலையை அறிவித்தனர்.
நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து, சுமார் 30 படகுகளில் 3,300-க்கும் மேற்பட்டோர் எல் ஹியரோ தீவை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.