முகப்பு
இந்தியா

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி சட்டப்பேரவைக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு நிலவியது.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 2:39 PM
- கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:38 AM

தில்லி சட்டப்பேரவைக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு நிலவியது.

தில்லி சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் யாரோ வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். உடனே சட்டப்பேரவைக்கு பாதுகாப்புப் படையினர் விரைந்தனர்.

பிறகு தில்லி காவல் துறை, வெடிகுண்டு அகற்றும் படை, மோப்ப நாய்ப் படை மற்றும் தீயணைப்புப் படை ஆகியவையும் வளாகத்திற்கு விரைந்தன.

Advertisement

இதைத்தொடர்ந்து வளாகத்தில் முழுமையான சோதனை நடத்தப்பட்டதாக அந்த வட்டாரம் தெரிவித்தது. "இதுவரை சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை. நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது," என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும், மர்ம மின்னஞ்சல் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

சமீப காலமாக பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Security forces rushed to the Delhi Assembly on Monday after a bomb threat was received via email, prompting a swift response from multiple agencies, police sources said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.