முகப்பு
இந்தியா

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு நிலவியது.

Updated On : 25 ஏப்ரல் 2026, 7:35 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு நிலவியது.

தலைநகர் தில்லியில் உள்ள ரோஹிணி செக்டர் 18 மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சனிக்கிழமை மாலை மர்ம நபர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

இந்த மிரட்டலைத் தொடர்ந்து, வெடிகுண்டை அகற்றும் குழுவினர், மத்திய பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வளாகத்தில் முழுமையான தேடுதல் நடத்தினர்.

Advertisement

Advertisement

சோதனையின் போது சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

இதையடுத்து விசாரணையில், ​​போலி மிரட்டல் அழைப்பு விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீஸ் கைது செய்தது. முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

நிலைமை உடனடியாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது, மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இயல்பு நிலை செயல்பாடுகள் எந்த இடையூறும் இன்றி தொடர்ந்தன என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.

summary

A bomb threat call at the Rohini Sector 18 metro station triggered a security scare on Saturday evening, but nothing suspicious was found during a thorough check, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.