மெட்ரோ ரயிலில் தலைமைச் செயலகத்துக்கு சென்ற தில்லி முதல்வர்!
தலைமைச் செயலகத்துக்கு தில்லி முதல்வர் மெட்ரோ ரயிலில் சென்றது குறித்து...
எரிபொருள் சேமிப்பு திட்டத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக, தில்லி முதல்வர் ரேகா குப்தா, இன்று மெட்ரோ ரயிலில் தலைமைச் செயலகத்துக்கு சென்றுள்ளார்.
முன்னதாக, மேற்கு ஆசிய போர்ச்சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்வை எதிர்கொள்ள, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறும் முடிந்தவரை, ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறும், எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, கடந்த மே 14 ஆம் தேதி, தில்லியில் சில முக்கியத் திட்டங்களை முதல்வர் ரேகா குப்தா அறிவித்திருந்தார். அதில், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மெட்ரோ ரயிலை பயன்படுத்த வேண்டும் என்ற திட்டமும் ஒன்று.
Advertisement
Advertisement
இந்தத் திட்டத்தை முன்மொழியும் நோக்கத்தில், முதல்வர் ரேகா குப்தா பயணிகளுடன் பயணியாக மெட்ரோ ரயிலிலும், அரசுப் பேருந்திலும் தன்னுடைய வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்துக்கு இன்று சென்றார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை நான்கு முறை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
To emphasize fuel conservation, Delhi Chief Minister Rekha Gupta traveled to the Secretariat by Metro train on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.