முகப்பு
இந்தியா

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் அதிர்ச்சி தருமா? அதுவும் ரூ.18, ரூ.35 வரை!!

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் முறையே ரூ.18, ரூ.35 வரை உயரக்கூடும் என்பது பற்றி..

Updated On : 16 ஏப்ரல் 2026, 12:16 pm IST
அதிர்ச்சி தருமா பெட்ரோல், டீசல் விலைகள் - file photo
பகிர்:

ஈரான் போர் காரணமாக, பெட்ரோல், டீசல் நிறுவனங்களுக்கு வரத்துக் குறைந்து கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை அடைந்து வருவதால் ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்ததும் உடனடியாக எரிபொருள் விலை உயர்வை மக்கள் சந்திக்கும் நிலை அபாயம் இருப்பதாக ஆரூடங்கள் கூறுகின்றன.

அதுவும் ஏதோ ஓரிரண்டு ரூபாய்கள் அல்ல என்றும் பெட்ரோல் விலை ரூ.18 வரையிலும், டீசல் விலை ரூ.35 வரையிலும் உயர்த்தப்படலாம் என்றும், தற்போது ஒரு லிட்டருக்கு இந்த அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை எதிர்கொள்வதால், அதனை ஈடுபட்டும் வகையில் விலை உயர்வுகள் குறித்த அறிவிப்புகள் வரலாம் என கூறப்படுகிறது.

வாக்களித்த மக்களுக்கு நிச்சயம் மத்திய அரசு ஒரு பரிசு கொடுக்கும், அந்த பரிசு பெட்ரோல், டீசல் விலை உயர்வாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து எண்ணெய்க் கப்பல்கள் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டிருக்கும் நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தாலும், அந்த சுமை, மாநில தேர்தல் காரணமாக எண்ணெய் நிறுவனங்களே சுமக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மே 29ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு ஆனதும், விலை உயர்வு அறிவிக்கப்பட்டு, அந்த சுமை மக்கள் மீது மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத் துறை நிறுவனங்கள் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூ.18ம், டீசல் விலையில் ரூ.35ம் நட்டத்தை சந்திக்கின்றனவாம். எனினும், பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றமின்றி நீடிக்கின்றன.

கடந்த ஒரு சில மாதமாகவே உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் கடுமையான ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளன - ரஷ்யா - உக்ரைன் போரைத் தொடர்ந்து ஒரு பீப்பாய் 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது. அதுபோல இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பீப்பாய் சுமார் 70 டாலராகக் குறைந்து வந்த போது, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் எரிபொருள்கள் விநியோகத்தின் மீது புதிய அழுத்தத்தை உண்டாகின்றன. இதனால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதம் மீண்டும் சுமார் 120 டாலராக உயர்ந்தது.

இதனால், நாட்டில் உள்ள மிகப்பெரிய மூன்று எண்ணெய் நிறுவனங்களும் கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஒரு நாளில் ரூ.2,400 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தன. இதையடுத்தே மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை குறைத்ததால் நிறுவனங்களின் நஷ்டம் ரூ.1,600 கோடியாக மாறியது. மத்திய அரசின் சுங்க வரி குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

அதாவது, ஒரு பீப்பாய் சுமார் 70 டாலராகக் குறைந்த போது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எண்ணெய் நிறுவனங்கள் அடைந்த லாபத்தை கடந்த மார்ச் மாதம் முழுவதும் காலி செய்துவிட்டதாக, எண்ணெய் நிறுவனங்களின் கடந்த காலாண்டு கணக்கு நஷ்டக் கணக்கையே எழுதுவதாகக் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு எண்ணெய் நிறுவனங்கள் முறையே ரூ.18 மற்றும் ரூ.35 வரை நஷ்டத்தை சந்திக்கின்றன. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 10 டாலர் அதிகரிக்கும் போதெல்லாம், எரிபொருள்கள் விநியோகத்துக்கு வரும்போது இழப்புகள் லிட்டருக்கு சுமார் 6 ரூபாய் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அதன் எரிபொருள் தேவையில் 88 சதவிகிதத்துக்கும் மேல் இறக்குமதி செய்யப்படும் நிலையில், தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்கள் நிறைவு பெற்றதும் இந்தியா மிகப்பெரிய எரிபொருள் விலையேற்றத்தை சந்திக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments