முகப்பு
இந்தியா

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியைக் கண்டித்து யோகி ஆதித்யநாத் பேரணி!

மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதா தோல்வியைக் கண்டித்து...

Updated On : 21 ஏப்ரல் 2026, 12:48 pm IST
யோகி ஆதித்யநாத் பேரணி - video crop
பகிர்:

மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதா தோல்வியடைந்ததைக் கண்டித்து நடைபெற்ற பேரணியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்கும், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்துவதற்கும் மத்திய அரசு கொண்டுவந்த அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா, கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் தோல்வியடைந்தது.

ஜன் ஆக்ரோஷ் மகிளா பாதயாத்திரை எனும் இந்தப் பேரணி, காளிதாஸ் மார்க்கில் அமைந்துள்ள ஆதித்யநாத்தின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து தொடங்கி, உத்தரப் பிரதேச சட்டப்பேரவை வளாகத்தில் நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

பேரணி தொடங்குவதற்கு முன்னதாக, தனது இல்லத்திற்கு வெளியே திரண்டிருந்த கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய ஆதித்யநாத்,

காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிராக, நாடு முழுவதும் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியின் அடையாளமாக இந்தப் பேரணி அமைகிறது என்று அவர் கூறினார்.

ஆதித்யநாத்துடன் இணைந்து, அவரது துணை முதல்வர்களான கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோரும், பாஜகவின் பிற முக்கியத் தலைவர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

summary

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath participated in a rally held to condemn the failure of the Constitutional Amendment Bill regarding women's reservation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.