முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் தொடங்கி, விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 7:26 AM
விறுவிறுப்பான வாக்குப்பதிவு - பிரதி படம்
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்கட்ட தோ்தல் நடைபெறும் 152 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள்.

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. 152 தொகுதிகளில் இன்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு இன்றும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த முதல்கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 3.60 கோடி போ் (ஆண்கள் 1.84 கோடி, பெண்கள் 1.75 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 465). இவா்கள் வாக்களிக்க வசதியாக, 44,378 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 2.5 லட்சம் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

முதல்கட்ட தோ்தல் நடைபெறும் தொகுதிகள் 152

வாக்காளா்கள் 3.60 கோடி

வேட்பாளா்கள் 1,487

வாக்குப்பதிவு மையங்கள் 44,378

summary

First phase of elections in West Bengal Vigorous voting begun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.