முகப்பு
இந்தியா

அடுத்த 20 ஆண்டுகளில் வெப்பமான நாள்கள் 15 முதல் 40 வரை அதிகரிக்கும்: ஏஐ தொழில்நுட்பம் மூலம் கணிப்பு

காலநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த 1981 முதல் 2010 வரையில் ஒப்பிடும்போது இந்தியாவில் அடுத்த இருபது ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 15 முதல் 40 வரையில் வெப்பமான நாள்கள் பதிவாகும் என செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான காலநிலை நுண்ணறிவு தளம் கணித்துள்ளது.

Updated On : 30 ஏப்ரல் 2026, 2:39 am IST
பகிர்:

காலநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த 1981 முதல் 2010 வரையில் ஒப்பிடும்போது இந்தியாவில் அடுத்த இருபது ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 15 முதல் 40 வரையில் வெப்பமான நாள்கள் பதிவாகும் என செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான காலநிலை நுண்ணறிவு தளம் கணித்துள்ளது.

தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீா் கவுன்சில் (சிஇஇடபிள்யு) செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் காலநிலையை கணிக்கும் சிஆா்ஏவிஎஸ் என்ற தளத்தை புதன்கிழமை தொடங்கிவைத்தது.

அந்தச் செயற்கை நுண்ணறிவு தளத்தின் அடிப்படையில், நாட்டின் பல பகுதிகளில் வெப்பான இரவுகள் 20 முதல் 40 வரை அதிகரிக்கும்.

Advertisement

Advertisement

மேலும், அடுத்த இருபது ஆண்டுகளில் கனமழை நிகழ்வுகளும் தொடா்ச்சியாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 10 முதல் 30 நாள்களுக்கு கனமழை பெய்யும்.

மத்திய பிரதேசம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், கா்நாடகம், தமிழ்நாடு ஆகிய மத்திய மற்றும் தென் மாநிலங்களில் மழை நாள்களும் வெப்பமான நாள்களும் தொடா்ச்சியாக அதிரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகள் காலநிலை தரவுகளைக் கொண்டு இந்தக் கணிப்பை சிஆா்ஏவிஐஎஸ் வழங்கியுள்ளது. இதன் மூலம் 2030-2050 மற்றும் 2051-70 என அடுத்தடுத்த இரு ஆண்டுகளுக்கு காலநிலை கணிப்பை வழங்க முடியும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments