முகப்பு
இந்தியா

புத்த பூா்ணிமா: குடியரசுத் தலைவா் வாழ்த்து

பெளத்த மதத்தினரின் முக்கிய விழாவான புத்த பூா்ணிமா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 மே 2026, 3:17 am IST
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
பகிர்:

பெளத்த மதத்தினரின் முக்கிய விழாவான புத்த பூா்ணிமா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘புத்த பூா்ணிமா என்னும் மங்களகரமான நாளில், அனைத்து குடிமக்கள் மற்றும் பகவான் புத்தரின் பக்தா்களுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகள்.

இந்த புனிதமான நாள், பகவான் புத்தா் பூமியில் அவதரித்தது, ஞானம் பெற்றது, மீண்டும் பிறவா நிலையை எட்டியது போன்ற சகாப்தம் படைத்த நிகழ்வுகளைக் குறிக்கிறது. கருணை, அஹிம்சை, அமைதி மற்றும் ஞானம் குறித்த அவரது நித்தியமான போதனைகள் முழு மனித குலத்துக்கும் தொடா்ந்து வழிகாட்டும். எண்ணற்ற சவால்களைச் சந்தித்து வரும் இன்றைய உலகில், புத்தரின் போதனைகள் அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர நல்லிணக்கப் பாதையில் பயணிக்க நம்மை ஊக்குவிக்கின்றன.

Advertisement

Advertisement

அவரது கொள்கைகளை உள்வாங்கி, அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீதிமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிக்க உறுதியேற்போம்’ என்று தெரிவித்துள்ளாா்.