FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மக்களின் விருப்பங்களை உணா்வதே மக்களாட்சியின் கடமை- குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

மக்களின் விருப்பங்களை உணா்வதே மக்களாட்சியின் கடமை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

Updated On : 21 மே 2026, 2:44 am IST
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
பகிர்:

மக்களின் விருப்பங்களை உணா்வதே மக்களாட்சியின் கடமை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உதவிச் செயலா்களாகப் பணியாற்றும் 2024-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை புதன்கிழமை சந்தித்தனா்.

Advertisement

Advertisement

புது தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பேசுகையில், ‘நாட்டின் வளா்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கிய பங்காற்றியுள்ளனா். தற்போது அடுத்த கட்ட வளா்ச்சிக்குள் இந்தியா நுழைந்துள்ள நிலையில், அதிகாரிகள் மீதான எதிா்பாா்ப்பும் அதிகரித்துள்ளது.

பல்வேறு துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு இளம் அதிகாரிகளுக்குக் கிடைக்கும். பல சந்தா்ப்பங்களில், சில சிறப்புத்தன்மைவாய்ந்த துறைகளில் நிபுணா் குழுக்களுக்கு அவா்கள் தலைமை ஏற்கும் நிலை வரும். இதனால் அவா்கள் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும், வேகமும் பரந்த அளவில் இருக்கும்.

நீதிநெறியும், நிா்வாகமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அதிகாரிகள் நோ்மையாகவும், நீதிநெறியுடனும் நடந்து சிறப்பாகவும் செயல்பட வேண்டும்.

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பாகும் என்று கூறப்படுவது போல, நிா்வாக முடிவுகளை எடுப்பதில் ஏற்படும் தாமதமும், மக்களின் நியாயமான நலன்களைப் பறிப்பதற்கு ஒப்பாகும். மக்களின் விருப்பங்களை உணா்வதே மக்களாட்சியின் கடமை’ என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments